வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2015 (01:04 IST)

பாமக ஆட்சியின் போது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி: ஜி.கே.மணி அறிவிப்பு

தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, புதுக்கோட்டையில்  பாமக தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:– 
 
2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலை நோக்கி பாமக சென்று கொண்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரசாரமும், பல்வேறு செயல் திட்டங்களும் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.
 
பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.  லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தப்படும். லஞ்சம், ஊழலற்ற ஆட்சி அமைப்போம்.
 
திமுக மற்றம் அதிமுக அணிகளுக்கு மாற்றாக பாமக உருவெடுத்துள்ளது. எங்களது கூட்டணி தேர்தலின் போது வலுவாக அமையும். எனவே, 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாமக ஆட்சி அமையும்பட்சத்தில், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றார். 

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்துவரும் நிலையில் பாமக நிலைப்பாடு திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்கும் போது கடும் நெருக்கடியை கொடுக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.