1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 4 நவம்பர் 2015 (21:28 IST)

தங்க நாணயம், தங்கப் பத்திரத் திட்டத்தை நாளை அறிமுகப்படுத்துகிறார் பிரதமர் மோடி

அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம், தங்க டெபாசிட் திட்டம் மற்றும் தங்கப் பத்திரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை டில்லியில் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.


 
 
இந்தியாவில் முதன்முறையாக தங்க நாணயங்களை அரசே வெளியிட உள்ளது என்றும் முதலில் 5 மற்றும் 10 கிராம் நாணயங்களும் 20 கிராம் எடையில் கட்டியும் கிடைக்கும் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இந்த நாணயங்களை போலியாக தயாரிக்க இயலாத வகையிலும் எளிதில் மறுசுழற்சி செய்யக் கூடியது போன்ற சிறப்பம்சங்களை இந்நாணயங்கள் கொண்டுள்ளதாகவும் இவை மத்திய அரசு அமைப்பான எம்எம்டிசியின் விற்பனைய நிலையங்களில் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
தங்கம் அடிப்படையிலான 2 புதிய முதலீட்டுத் திட்டங்களால் 20 ஆயிரம் டன் தங்கம் வெளிவரலாம் என்றும் வங்கிகளில் 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் பரிவர்தனை நடைபெறும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.