Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தி.மு.க.வின் ஒரே சாய்ஸ் பி.கே.சேகர் பாபு: பரபரப்பான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 10 மார்ச் 2017 (17:48 IST)
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சார்ப்பில் போட்டியிட பி.கே.சேகர் பாபுதான் ஒரே சாய்ஸ். சசிகலா, ஓ.பி.எஸ்., தீபா என மூன்று அணிக்கு மத்தியில் திமுக வெற்றி பெறுமா என்ற கேள்விகளுடன் தமிழக அரசியல் சூழல் நிலவுகிறது.

 

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி நடைப்பெற உள்ளது. அதிமுக வெற்றிபெற்ற தொகுதியில் அதிமுக வெற்றி சந்தேகத்தில் உள்ளது. ஓ.பி.எஸ்., சசிகலா என இரு அணிகளோடு மூன்றாவது அணியாக தீபா அணியும் இணைந்தது. 
 
ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுக முன்பு கிடைத்த வாக்கு மூன்றாக பிரியும் நிலையில் உள்ளது. திமுக சார்பில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த சிம்லா முத்துச்சோழன் மீண்டும் அதே தொகுதியில் நிற்பதற்கான வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
 
தற்போது திமுகவிற்கு பி.கே.சேகர் பாபுதான் ஒரே சாய்ஸ் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆர்.கே.நகர் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. திமுக இதை பயன்படுத்தி தீவிரமாக களமிறங்கினால் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இந்த வெற்றி பெரும் உதவியாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

சேகர் பாபு ஏற்கனவே துறைமுகம் தொகுதியில் வெற்றிப்பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :