1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2015 (21:30 IST)

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - நள்ளிரவு முதல் அமல்

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
 

 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம் ஆகியவற்றுக்கு ஏற்ப, நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன.
 
அதன்படி கடந்த மாதம் 30 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது இந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 46 காசுகளும் குறைக்கப்படுவதாக எண்ணைய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
 
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை குறைப்பின் படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 60.28 ஆகவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 47.28 ஆகவும் குறைந்துள்ளது.