1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2015 (21:39 IST)

ஊழல் தொடர்பாக கருணாநிதி, முக ஸ்டாலின் மீது விசாரணை கமிஷன் அமைக்க கோரிய மனு தள்ளுபடி

திமுக ஆட்சி காலத்தின்போது நடந்த முறைகேடுகள், ஊழல் தொடர்பாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி, பொருளாளர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


 
 
உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சில நாட்களுக்கு முன்பு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கொடுத்த பேட்டியில், கடந்த 2006-2011ஆம் ஆண்டில் நடந்த திமுக ஆட்சி காலத்தில் ஊழல், முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 
 
எனவே, ஸ்டாலின் சொன்னது போல, திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து கண்டறிய, அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த தனி கமிஷன் அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்
 
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரிகை செய்தியை அடிப்படையாக வைத்து மனுதாரர் சொல்லும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும், ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.