வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2017 (12:36 IST)

பீட்டா அமைப்பை வெளியேற்ற தமிழக சட்டசபை கூட்டத்தில் தீர்மானம்: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கோரிக்கை

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் ஆலோசனை கூட்டம் கரூர் மகாத்மா காந்தி ரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் த.கார்வேந்தன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா முன்னிலை வகித்தார். அப்போது வரும் 23 ம் தேதி தமிழக சட்டசபை கூடுகின்றது. அந்த கூட்டத்தொடரில் முதலாவதாக தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் சேவல்கட்டிற்கு ஊறுவிளைவித்த பீட்டா அமைப்பை தமிழக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் வெளியேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.


 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறும்போது, தமிழகத்தில் மீண்டுமொரு இந்தி திணிப்பு போராட்டத்திற்கு எதிராக எப்படி தமிழர்கள் எழுந்தார்களோ ? அதே போல் இந்த காளைகளை முத்தமிடும் ஜல்லிக்கட்டு என்ற ஏறு தழுவதல் போட்டிக்கு தடை விதிக்கும் சம்பவத்திற்கு வீருகொண்டு எழுகின்றனர்.

தமிழர்களின் கலாச்சாரத்தை காவல்துறை முடக்க நினைக்கின்றது, இதே போன்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை, கர்நாடகா அரசு கண்டித்ததோடு, லாரி, பஸ்களை போலீஸார் தயவோடு எரித்தனர். அங்கு காவல்துறையின் முன்னிலையிலேயே நடத்தப்படுவது, கலவரம் இல்லையா ? என்று கேள்வியும் எழுப்பினார். தமிழர்களின் கலாச்சாரத்தை சீர்கேடு அடைய செய்யும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, மாடு விடுதல் என்கின்ற ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் சண்டையில் ஈடுபடுவதற்கு முன்னரே வீரர்களை கைது செய்வதற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமென்றார். பேட்டியின் போது, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா, சென்னை மாவட்ட செயலாளர் செந்தமிழன், வெள்ளக்கோயில் ஒன்றியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.

-கரூரிலிருந்து ஆனந்தகுமார்