வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 21 ஜனவரி 2017 (14:53 IST)

தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால்...? - பீட்டா இயக்குனர் அடாவடி

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தால், அதற்கு சட்டரீதியாக போராடுவோம் என பீட்டா அமைப்பின் இயக்குனர் மணிலால் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வேண்டும் மற்றும் பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழகமெங்கும் இளைஞர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்தும் அவர்கள் அதை நிராகரித்துவிட்டனர்.  ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிரந்தர சட்டம் இயற்றும் வரை நாங்கள் போராட்டத்தை கை விட மாட்டோம் என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பீட்டா அமைப்பின் இயக்குனர் மணிலால் இதுகுறித்து ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “ தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வரட்டும். ஆனால், எல்லா நேரத்திலும் எங்களுக்கு சட்ட ரீதியான வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக எங்கள் சட்ட நிபுணர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அதையும் மீறி ஜல்லிக்கட்டு நடந்தாலும், தொடார்ந்து அதற்கு எதிராக போராடுவோம்” என அவர் தெரிவித்தார்.