Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புதிய தலைமை செயலாளராக சகாயம் வர வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை!

அம்மா இல்லாத அம்மாபுதிய தலைமை செயலாளராக சகாயம் வர வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை! வாட்டர்: மெல்ல மெல்ல மறையும் ஜெயலலிதா!


Caston| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:57 IST)
தமிழக தலைமை செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறை நேற்று காலை அதிரடியாக சோதனை நடத்தி பல லட்சம் ரூபாய் புதிய நோட்டுகள், தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றினர்.

 
 
இதனையடுத்து புதிய தலைமை செயலாளராக நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என பெயர் பெற்ற சகாயத்தை நியமிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு பெருகியது. ஆனால் இன்று புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதனை நியமித்தது அரசு.
 
இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், புதிய தலைமைச் செயலாளர் பதவிக்கு தமிழ்நாட்டு மக்களும், சமூக ஆர்வலர்களும் சகாயத்தை நியமிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என கூறியுள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், புதிய தலைமைச் செயலாளர் பதவிக்கு தமிழ்நாட்டு மக்களும், சமூக ஆர்வலர்களும் சகாயம் அவர்களை நியமிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
 
தமிழக அரசு தைரியமிக்க நேர்மையான சகாயம் அவர்களை நியமித்தால் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் தவறு செய்வதை தட்டிக்கேட்பார் என்கிற காரணத்தினால் தான் இவரை நியமிக்கவில்லை என்று மக்களும் பேசிக்கொள்கிறார்கள் என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :