Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடராஜனின் இடையூறு பற்றி நாட்டு மக்களுக்கு தெரியும் - ஓ.பி.எஸ் அதிரடி


Murugan| Last Updated: புதன், 8 பிப்ரவரி 2017 (14:43 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் பற்றி தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பு ராஜீனாமா கடிதத்தை பெற்றுக் கொண்டதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் பரபரப்பு பேட்டியளித்தார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு முதலே, தமிழக அரசியலில் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
 
இந்த விவகாரம் சசிகலா தரப்பிற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதில், சசிகலாவை அவரின் பின்னால் இருந்து, அவரின் கணவர் நடராஜனே இயக்குகிறார் என்று பொதுவாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து ஓ.பி.எஸின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் “ நடராஜனின் இடையூறு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :