Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சி.ஆர்.சரஸ்வதியை கதற விட்ட பொதுமக்கள்: சசிகலாவை ஆதரிப்பதால் ஃபோன் போட்டு திட்றாங்க!

சி.ஆர்.சரஸ்வதியை கதற விட்ட பொதுமக்கள்: சசிகலாவை ஆதரிப்பதால் ஃபோன் போட்டு திட்றாங்க!

சனி, 11 பிப்ரவரி 2017 (09:03 IST)

Widgets Magazine

தமிழக அரசியல் நிலவரம் தொடர்ந்து பரபரப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் யாருக்கு அழைப்பு விடுப்பார் சசிகலாவா? பன்னீர்செல்வமா? என தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.


 
 
சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கவும் பரபரப்பு எகிறியது. சில எம்எல்ஏக்களின் ஆதரவும், பல மூன்னாள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் தொண்டர்கள் ஆதரவு ஓபிஎஸுக்கு கிடைக்கவும் மீதமுள்ள எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பினால் சொகுசு விடுதியில் சிறைவைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் பொதுமக்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு அதிகரித்துள்ளது. தங்கள் தொகுதி எம்எல்ஏக்களை தொடர்புகொள்ளும் பொதுமக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் ஓபிஎஸுக்கு ஆதரவு அளியுங்கள் என வலியுறுத்துகிறார்கள்.
 
தொடர்ந்து தொகுதி மக்களிடம் இருந்து போன் கால்கள் வருவதால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். ஃபோனை ஆஃப் செய்து வைக்கிறார்கள். இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியையும் பொதுமக்கள் ஃபோன் போட்டு திட்டியதாக அவர் கூறியுள்ளார்.
 
சி.ஆர்.சரஸ்வதி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் அவருடைய ஃபோன் நம்பரை யாரோ சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார்கள். பலராலும் இது பகிரப்பட்டதால் யார் யாரோ ஃபோன் போட்டு தன்னை கண்டபடி திட்டுவதாக சி.ஆர்.சரஸ்வதி குற்றம் சாச்சியுள்ளார்.
 
ஃபோனை ஆன் செய்ய முடியவில்லை கண்டபடி திட்டுகிறார்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் இரண்டு நாட்களாக ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளதாக சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஓ.பி.எஸ். அரசியலில் இருந்து காணாமல் போவார்: கொந்தளிக்கும் நாஞ்சில் சம்பத்

நிச்சயமாக ஒரு நாள் ஓபிஎஸ் அரசியலில் இருந்தே காணாமல் போவார் என்று நாஞ்சில் சம்பத் கருத்து ...

news

மோசமான உணவு வழங்குவதாக வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் மாயமானதால் பரபரப்பு

பாதுகாப்பு படை வீரர்களுக்கு தரக்குறைவான உணவு வழங்குவதாக வீடியோ வெளியிட்ட டி.வி யாதவ் ...

news

பன்னீர்செல்வத்துக்கு எதை இழந்தாவது முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டும்: விஜயசாந்தி

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதை இழந்தாவது, முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டும். அதற்காகத்தான் ...

news

“ஆளுநர் மத்திய அரசுக்கு ’அந்த மாதிரி’ அறிக்கை அனுப்பவில்லை”

ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை ...

Widgets Magazine Widgets Magazine