வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 26 ஜனவரி 2017 (12:06 IST)

ஜெயலலிதா இறந்த பின்னர் கட்சியில் ஏராளமான பிரச்சனை: போட்டுடைத்த பன்னீர்செல்வம்!

ஜெயலலிதா இறந்த பின்னர் கட்சியில் ஏராளமான பிரச்சனை: போட்டுடைத்த பன்னீர்செல்வம்!

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணடைந்தார். அவரது மறைவுக்கு பின்னர் அவரது தோழி சசிகலா கட்சியின் தலைமை பொறுப்பான பொதுச்செயலாளர் பொறுப்பை வகித்து வருகிறார்.


 
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கட்சியில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகியுள்ளதாக பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
 
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அதிமுக சார்பில் ஜனவரி 25-ஆம் ஆண்டு நடைபெறும். இதனையடுத்து நேற்று நடந்த கூட்டத்தில் அதிமுக பொருளாளரும், தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
 
இதில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அவர், தமிழுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டம் 1965-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி தான் முடிந்தது.
 
தமிழ்நாட்டை அப்போது ஆண்ட காங்கிரஸ் அரசை மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டம் அப்போது வீழ்த்தியது. அதிமுக கட்சியில் எம்ஜிஆர் காலத்தில் 16 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தார்கள். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ராணுவ கட்டிப்பாட்டுடன் கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஒன்றரை கோடியாக உயர்த்தினார்.
 
ஆனால் தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நம் கட்சியில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகியுள்ளன என கூறிய பன்னீசெல்வம் அம்மா தெய்வமாக இருந்து நம்மை காத்து கொண்டு இருப்பதால் எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து நாம் வெற்றி கண்டு வருகிறோம் என்றார்.