Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மக்கள் திருந்தி விட்டார்கள்; மறு தேர்தல் நடத்துங்கள் - ஆர். பார்த்திபன்

சனி, 11 பிப்ரவரி 2017 (11:21 IST)

Widgets Magazine

தமிழகத்தில் மறு தேர்தலை நடத்துவது நல்லது என இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார். 


 

 
நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சமாதிகள் அருகே, சில நேரம் செலவிட்டார்.  அதன்பின், அந்த புகைப்படத்தை தன்னுடைய முகநூலில் பதிவிட்டு அவர் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
 
முதன்முறையாக ... மறைந்த  முதல்வர் சமாதிக்கு சென்றேன்.
 
தியானிக்க அல்ல... ஜீரணிக்க !
 
மரணத்தின் மர்மம், மூன்ரெழுத்துக்காரரின் 75 நாள் மௌனத்தின் மாமர்மம்,
 
அரசியல் அதர்மங்கள், ரிசார்ட்டில் Mla-க்கள், ரிமோட்டாய் கோடிகள், நடப்பவை நடந்தவை....
 
விளங்காமல் கலங்கரை விளக்கத்திலிருந்து நடந்து சென்றேன். 
 
கட்சிகளின்  கல்மிஷங்கள் இல்லாத Mgr-ன் விசுவாசிகள்,
 
அதிமுக தொண்டர்கள், அறியா பொதுஜனங்கள், அணையா தீபங்களாய்
 
அங்கே ஒளியூட்டல் ! 
 
அம்மா'என்றழைக்கப்பட்டவரின் ஆன்மா என்ன நினைக்கும் ?
 
எனக்கும் அவருக்குமான சில சந்திப்புகளும் சம்பாஷைனைகளும் வந்து போயின நினைவில்!
 
நம்பிக்கை துரோகமும் துரோகிகளின் நம்பிக்கையும் எதுவுமே சகிக்கல!
 
திருமதி சசிகலாவோ, திருமிகு OPS-ஸோ, ஆட்சியமைப்பது சட்ட பூர்வமேயாகையால் சட்டு புட்டுன்னு சட்டசபைக்கு வந்து மக்கள் பணி பாருங்கள்!
 
எம்மக்கள் திருந்திவிட்டார்கள்!!! மறுதேர்தலை சந்திக்க வாருங்கள் !
 
நோட்டுக்காக அல்ல...நாட்டுக்காகவே ஓட்டு!  ”

என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலா ஆதரவு எம்எல்ஏ தொகுதிக்குள் வர தடை: கொதித்தெழுந்த மக்கள்!

அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் பல எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம் பக்கம் போக வாய்ப்புள்ளதால் ...

news

ஓ.பி.எஸ்-ற்கு மேலும் 2 அதிமுக எம்.பி.க்கள் ஆதரவு - உடையும் சசிகலா கூடாரம்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக மேலும் 2 எம்.பி.க்கள் ஆதரவு ...

news

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு 14-ம் தேதி: சசிகலாவின் முதல்வர் கனவு?

சசிகலாவை முதலமைச்சராக்க அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தாலும் அவருக்கு ...

news

செங்கோட்டையன் சசிகலாவுக்கு எதிராக திரும்புவாரா?: மனைவியின் ஆதரவு ஓபிஎஸுக்கு!

அதிமுக இரண்டாக பிளவுபட்டு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என மோதிக்கொண்டு இருக்கிறது. தொண்டர்கள் ...

Widgets Magazine Widgets Magazine