1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (17:24 IST)

மனநலம் பாதித்த மகளை மருத்துவமனையிலேயே தவிக்கவிட்டுச் சென்ற பெற்றோர்

மனநலம் பாதித்தக்கப்பட்ட தங்களது சொந்த மகளை பெற்றோர்கள் அரசு மருத்துவமனையிலேயே தவிக்கவிட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
 

 
திண்டுக்கல் அருகே மெட்டனம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகள் செல்வராணி (21) மனநலம் பாதித்தவர். இவரை செப்.30ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வயிற்றில் குழந்தை உள்ளது என தெரிவித்தனர். மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது.
 
அப்பெண்ணை கர்ப்பமாக்கியவர் யார் எனத் தெரியவில்லை. இதற்கிடையில், மனநலம் பாதித்த அந்த பெண்ணிற்கு கர்ப்பத்தடை செய்யுமாறு பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், பெண்ணின் சம்மதம் இல்லாமல் செய்யமுடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில், 'மனநல பாதிப்புடன், குழந்தை பிரசவித்த மகளை எங்களால் பராமரிக்க முடியாது. அரசு மருத்துவமனை நிர்வாகமே பராமரிக்கட்டும்' என, மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதனால் மருத்துவ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இது குறித்து மருத்துவமனை இணை இயக்குனர் கூறுகையில், “அப்பெண்ணின் பெற்றோர் செயல் மனதாபிமானமற்றது. இதற்காக நாங்கள் அப்பெண்ணை கைவிட்டுவிட மாட்டோம். மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் அந்த பெண்ணையும், குழந்தையையும் அனாதை காப்பகத்தில் வைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.