Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாட்டையே உலுக்கிய பன்னீர் செல்வம் பேட்டி

Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (23:35 IST)

Widgets Magazine

அதிமுகவின் சட்டசபை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா விரைவில், தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
 

 

தமிழக முதலமைச்சராக சசிகலா நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் டெல்லி சென்ற தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு இன்னும் திரும்பவில்லை. இதனால், பதவியேற்கும் வைபோகம் தள்ளிப் போகிறது.
 
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்தினார். சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக ஜெயலலிதாவின் சமாதியில் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தனது மனக்குமுறல்களை கொட்டினார். அவர் பேசியபோது, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா வாங்கினார்கள் என்றும், மக்கள் விரும்பினால் எனது ராஜினாமாவை திரும்ப பெறுவதாகவும் கூறினார். மேலும் தனிப்பட்ட முறையில் என்னை அவமானப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்வேன். ஆனா முதலமைச்சராக அமரவைத்துவிட்டு  என்னை அதிகம் அவமானப்படுத்தினர். என்னால் கட்சிக்கு எந்த அவமானமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தேன் என்றார்.

முதல்வரின் இந்த பேட்டி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவரது இந்த பேட்டியால் சசிகலா தரப்பு கடும் கோபமடைந்திருப்பதாக கூறப்படுகிற்து.

முத்ல்வரின் இந்த பேட்டி குறித்து தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியபோது, தொண்டர்களின் மன பிரதிபலிப்பாகவே பன்னீர் செல்வம் பேட்டி அமைந்துள்ளது. முதல்வரையே மிரட்டியுள்ளார்கள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், ஆரம்பம் முதலே பன்னீர் செல்வத்தை சுதந்திரமாக செயல்படவிடவில்லை என்று கூறினார்.


பன்னீர் செல்வம் பேட்டியை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் முனுசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜெயலலிதா பொதுச் செயலாளராக யாரை நியமிக்க சொன்னார்?: ஓ.பி.எஸ் அதிரடி தகவல்

அதிமுக பொதுச்செயலாளராக மதுசூதனனை நியமிக்குமாறு ஜெயலலிதா என்னிடம் கூறினார் என்று ...

news

ஜெயலலிதா சமாதியில் இரவில் மவுன அஞ்சலி செலுத்திய ஓ.பி.எஸ்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ...

news

கட்டாயப்படுத்தி என்னை ராஜினாமா செய்ய வைத்தனர்: மௌனம் கலைத்தார் பன்னீர் செல்வம்

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ...

news

உச்ச நீதிமன்றம் அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உச்ச நீதிமன்றம் அருகே குண்டு வெடித்ததில் 20 பேர் பரிதாபமாக ...

Widgets Magazine Widgets Magazine