வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2017 (11:40 IST)

பணிவின் பணிவு நம் பன்னீர் அவர்களே போய் வாருங்கள்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை/புரட்சியை முடித்து வைத்ததில் நம் முதல்வருக்கும் ஒரு  பங்கு உண்டு. ஆரம்பத்தில் இருந்தே சிலர் இந்த புரட்சியை ஒடுக்க சதி செய்தன. மாட்டு கறி சாப்பிடுபவர்கள் எல்லாம் ஜல்லிக்கட்டு களத்தில் நிற்கிறார்கள்  என வேற்றுமை பரப்பி சதி செய்தன. வடிவாசலில் பறை அடிப்பவன் எல்லாம் ஜல்லிக்கட்டுக்கு போராடுகிறான் என நச்சு வார்த்தைகள் பரப்பி சதி செய்தன. அந்த அதனை சதிகளையும் முன் நின்று தடுக்க வேண்டிய முதமைச்சர் சதிகளின் பக்கம் சாய்ந்தார்.


 

சசிகலாவை வில்லியாக/வேலைக்காரியாகக்  காட்டி பாமரனை வேண்டுமானால் ஏமாற்றலாம், ஆனால் படித்தவர்களை இளைஞர்களை ஏமாற்ற முடியாது, காலத்தை ஏமாற்ற முடியாது, மன சாட்சியை ஏமாற்ற முடியாது. பதில் சொல்ல வேண்டியது இந்த அரசு, பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நம் பணிவின் பணிவு நம் பன்னீர் அவர்கள்.

மாண்புமிகு முதல்வர் அவர்களே ! மூன்று ஆண்டுகள் தூங்கிய ஒரு அரசை தடி கொண்டு எழுப்பியவர்கள் இளைஞர்கள். பெரும் மழை, நூற்றாண்டு வெள்ளத்திலும் களம் கண்டவர்கள் இளைஞர்கள். வர்த்தா சுற்றி  சுற்றி அடித்தாலும் சுழன்று சுழன்று களம் கண்டவர்கள் இளைஞர்கள். கடைசியில் அவனுக்கு கிடைத்து என்னவோ தேச விரோதி !  சமூக விரோதி என்ற பட்டம்.      

தோழர் என்ற வார்த்தை சமூக  விரோதிகளின் ரகசிய மொழி ஆனது. எண்ணுரில் வாளிகளில் கட்சா எண்ணெய் கழிவுகளை அள்ளி  கொண்டிருக்கிறானே அவன் தேச விரோதியா ?  சமூக விரோதியா ? பதில் சொல்லுங்கள் ! பணிவின் பணிவே எம்  செல்வமே !

ஒரு கண்ணில்  பன்னீர் மறு கண்ணில் வெந்நீரா பன்னீர்   

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில்   36 பேர் மட்டுமே இந்த அரசால் சட்டசபை விதி எண் 110 கீழ் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.   இன்னும் நுற்றுக்கணக்கானோர் கதி என்ன ? நடுக்குப்பமும் ரூதர் போர்டு காலணியும் விதி எண் 110 கீழ் வராத என்ன ? இல்லை அவர்கள் இரண்டாம் தர குடிமக்களா என்ன ?

முதல்வர் அவர்களே ! செங்கற்கள் வீசிய போலீஸ்காரர்,  வீட்டுக்கு தீ வைத்த போலீஸ்அக்கா, ஆட்டோவுக்கு  தீ வைத்த போலீஸ்காரர்,  வாகன ங்களை  அடித்து நொறுக்கிய போலீஸ்காரர்கள், பெண்களையும் முதியவர்களையும் கொடூரமாக தாக்கிய போலீஸ்காரர்கள், நடுக்குப்பத்தில் மக்களின் வாழ்வாதாரங்களை கொளுத்திய  போலீஸ்காரர்கள், மீது எல்லாம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விட்டதா என்ன ? எங்கே உங்களின் உங்களின் ராஜ தர்மம் ?

அண்ணாவும் பன்னீரும்
சட்ட சபையில் உங்களுக்கு பாடை கட்டினார்கள் என்று வருத்தப்பட்ட நீங்கள், நேற்று நீங்கள் மரியாதை செய்த அண்ணா அவர்களை, தென்னாட்டின் பெர்னாட்சா  அண்ணா அவர்களை, புற்று நோயால்  பாதிக்கப் பட்டு இருந்த அண்ணாவை, நேருக்கு நேர் நின்று மக்கள் சபையில் உங்களின் வாழ் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று கடுமையான விமர்சனங்கள் வைக்க பட்ட போதும் நேருக்கு நேர் எதிர் கொண்டார் அவர் தலைவர்.

 
கல்லா கமிஷனா ?
ஜல்லிக்கட்டு போராட்ட உறுதுணைக்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய நீங்கள், உண்மையான வினை ஊக்கியான மாணவர்களுக்கு ஏன் கடிதம் எழுதவில்லை ?. நீங்கள் இறுதி நாள் களத்திற்கு வந்திருந்தால் மாணவர்களுடன் பேசி இருந்தால் இந்த  விபரிதம் நடந்திருக்காது  யாரையோ திருப்திப் படுத்த, உங்களின் ஆட்சியை காப்பாற்ற தான், உலகம் வியந்த ஒரு புரட்சி முடித்து வைக்கப் பட்டு இருக்கிறது.

பிரச்சனைனு வந்தா கல்லை போடு ! இல்லைனா தடியை போடு !   இல்லைனா கமிஷனை போடு !  அது போல தான் நீங்கள் ராஜேஸ்வரன் கமிஷன போட்டு இருக்கீங்க

நீங்கள் ஜல்லிக்கட்டு நாயகனா ?

மனதில் கை வைத்து சொல்லுங்கள் அ தி மு க எம் எல் ஏ தென்னரசு சொன்னது போல நீங்கள் ஜல்லிக்கட்டு நாயகனா ? தி மு க எம் எல் ஏ புகழேந்தி இடம் நீங்கள் சொன்ன பணிவு கதையில், பணிவுக்கே பணிவான நீங்கள் ! உங்களின் பணிவைக் காட்ட வேண்டியது மக்களிடமும் மாணவர்களிடமும் தான். காலம் உங்களையும் உங்களின் ஆட்சியையும் பதிவு செய்யும் போது உங்களின் பணிவையும் பதிவு செய்யும். போய் வாருங்கள் ! பணிவின் பணிவே எம்  செல்வமே !

 
 

 
இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]