புறக்கணிக்கப்பட்ட ஓ.பி.எஸ் : கண்டுகொள்ளாத சசிகலா- வீடியோ

bala| Last Updated: புதன், 11 ஜனவரி 2017 (12:23 IST)
பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதல்வர் பன்னீர் செல்வத்தை கண்டுகொள்ளாமல், சசிகலாவிற்கே முக்கியத்துவம் கொடுக்கும் கொடுமை தொடர்ந்து நடந்துவருவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகவே அரசியல் பார்வையார்கள் கருதுகிறார்கள்.
 

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா டுடே மீடியா குழும நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள முதல்வர் பன்னீர் செல்வம் முதலிலேயே வந்துவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்தே சசிகலா அங்கு வந்தார். அப்போது அவரை  மீடியா குழுமத்தை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். அந்த இடத்தில் பன்னீர் செல்வமும் நின்றிருந்தார். ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. சசிகலாவை வரவேற்று அவரை உள்ளே அழைத்து செல்வதிலேயே விழா குழுவினர் ஆர்வம் காட்டினர். இந்த காட்சிகளை பக்கவாட்டில் நின்று கவனித்துகொண்டிருந்தார் முதல்வர் ஓ.பி.எஸ். சசிகலாவும் ஓ.பி.எஸ் நின்ற பக்கத்தை கூட திரும்பி பார்க்கவில்லை.

முதல்வர் ஒரு விழாவிற்கு வருகிறார் என்றால் அவருக்கு எப்படியான மரியாதைகள் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பாதுகாப்பு அதிகாரிகள் படை சூழ முதல்வரை விழா மேடைக்கு அழைத்து செல்லப்படுவது வழக்கம். ஆனால் இங்கோ சசிகலாவை விழா குழுவினர் அழைத்து சென்றபோது கூட்டத்தோடு கூட்டமாக பன்னீர் செல்வமும் உள்ளே சென்ற காட்சி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே இந்த விழாவில் பன்னீர் செல்வம் உரையாற்றும்போது சசிகலா நிகழ்ச்சியிலிருந்து திடீரென வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

வீடியோ உங்கள் பார்வைக்கு
webdunia

இதில் மேலும் படிக்கவும் :