Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் ஒன்றும் மிருகமில்லை: குத்திக்காட்டும் பன்னீர் செல்வம்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 8 பிப்ரவரி 2017 (10:07 IST)
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் வற்புறுத்தலால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

 
 
நேற்று மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் 40 நிமிடங்கள் தியானம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர் செல்வம் சசிகலாவால் தனக்கு நேர்ந்த அவமானங்கள் மற்றும் நிர்பந்தங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
 
இதைத் தொடர்ந்து நள்ளிரவில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா நட்ராஜன், திமுகவின் சதிதான் பன்னீர் செல்வத்தின் ஆவேசத்துக்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க. பக்கம் சாய்ந்து விட்டார் என சசிகலா பேட்டியளித்தார்.
 
இதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம். அவர் கூறியதாவது, மிருகங்கள் மனிதர்களை பார்த்தால் சிரிக்காது. மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள ஒரே வித்தியாசமே சிரிப்புதான். நான் மிருகம் அல்ல, அனைவரிடம் அன்பு பாராட்டும் மனிதன். அதனால் ஸ்டாலினை பார்த்து சிரித்தேன் என சசிகலாவிற்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :