Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரனிடமிருந்து அதிமுகவை பறிக்க பழனிச்சாமி திட்டம்?


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 10 மார்ச் 2017 (17:24 IST)
தினகரனிடம் இருந்து தலைமையை நிரந்தரமாக மீட்பது என முதல்வர் எடபாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 
அதிமுக குழுத் தலைவராக சசிகலாவை தினகரன் நியமித்துள்ளார். மேலும் செங்கோட்டையன், டிடிவி தினகரன், அ.தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி, பி.வேணுகோபால், ஏ.ஜஸ்டின்ராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இதில் தற்போதைய முதல்வர் எடபாடி பழனிச்சாமி இடம்பெறவில்லை. இதையடுத்து முதல்வர் பெயர் இடம்பெறாதது ஏன் கேள்வி எழுந்துள்ளது. தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல கட்டளைகளை போட்டுள்ளார். அவற்றை எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தாத காரணத்தினாலே ஆட்சிமன்ற குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை டிடிவி தினகரன் புறக்கணித்துள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் போன்றோர் தினகரனிடம் உள்ள அதிமுக தலைமையை நிரந்தரமாக மீட்பது என ரகசியமாக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :