Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மடியேந்தி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி: விட்டு விளாசும் பழ.கருப்பையா!

மடியேந்தி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி: விட்டு விளாசும் பழ.கருப்பையா!


Caston| Last Modified சனி, 29 ஜூலை 2017 (12:10 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் திமுகவில் ஐக்கியமாகிய பழ.கருப்பையா நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
 
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி சார்பில் நேற்று முன்தினம் மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் பழ.கருப்பையா பிரபல தமிழ் வார இதழின் இணையதளத்துக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது பேசிய அவர், மத்தியிலும், மாநிலத்திலும் என இரண்டு கல்வி அமைச்சர்கள் இருப்பதை கண்டித்தார். ஓன்று, இரண்டு ஆண்டுக்கு என பிச்சையெடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று அன்றைக்கு மட்டும் தயாராக மாணவர்களை அதில் திணிப்பதில் நியாயமில்லை என்றார்.
 
மேலும், திராவிட இயக்கங்களின் கெடுபிடிகளால் தான் எடப்பாடி பழனிச்சாமி அங்கே போய் மடியேந்தி நிற்கிறார். நம்முடைய உரிமைகளுக்காக நீங்கள் போராட வேண்டும். மடியேந்தி நிற்கக் கூடாது என கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார் பழ.கருப்பையா.


இதில் மேலும் படிக்கவும் :