வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (11:50 IST)

பழ.கருப்பையா ராஜினாமா ஏற்பு; துறைமுகம் தொகுதி காலியான தொகுதியாக அறிவிப்பு

பழ.கருப்பையா ராஜினாமா ஏற்பு; துறைமுகம் தொகுதி காலியான தொகுதியாக அறிவிப்பு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதை அடுத்து, துறைமுகம் தொகுதி காலியான தொகுதியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 

 
கடந்த 27-01-206 அன்று, ’அதிமுக கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட, துறைமுகம் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக’ தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்தார்.
 
இதனையடுத்து, நீக்கப்பட்டதற்கு மறுநாள் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக பழ.கருப்பையா செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்திருந்தார். மேலும், சட்டப்பேரவை செயலாளர் ஏற்க மறுப்பதாக தெரிவித்திருந்தார்.
 
இதனால், பழ.கருப்பையாக தனது கடிதத்தை, சட்டப்பேரவைச் செயலகத்துக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பிவைத்தார். இந்நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் ஏற்றுக் கொண்டார்.
 
இது குறித்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து துறைமுகம் தொகுதியை காலியான தொகுதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.