1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: வியாழன், 9 மார்ச் 2017 (13:20 IST)

இதென்ன பன்னீர் செல்வம் அணிக்கு வந்த சோதனை?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சசிகலா முதல்வராக பதவியேற்க முயன்றார். இதனால் கட்சி உயர் மட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி தொண்டர்கள் என பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த சூழ்நிலையில் சசிகலாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் ஓபிஎஸ் தலைமையில் 11 பேர் விலகி தனி அணியாக செயல்படத் துவங்கினர். சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தவறு என்றும், எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்தனர்.


 

இந்த நிலையில் பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த பி.ஹெச்.பாண்டியனை ஆதரித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டினர். அதில் அடுத்த முதல்வரே என்று வாழ்த்தியுள்ளனர். ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று கூறிவரும் நிலையில் அவரது அணியில் இன்னொரு முதல்வர் வேட்பாளரா என்று தொண்டர்கள் குழப்பம் அடைந்துவருகின்றனர்.  நன்றாக சென்றுகொண்டிருக்கும் ஓபிஎஸ் அணியில் தேவையில்லாத சர்ர்ச்சைகளை ஏற்படுத்தும் நோக்கம் இது போன்ற போஸ்டர்கள் வருகின்றன என்றும் பேசிக்கொள்கிறார்கள்.