Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உங்கள் ஓட்டு ஓவியாவிற்கே ; வாக்கு சேகரிக்கும் ரசிகர்கள் : இது என்னடா அக்கப்போர்!

Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (12:04 IST)

Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டுள்ள நடிகை ஓவியாவிற்கு கூகுளில் ஓட்டு போடுமாறு அவரின் ரசிகர்கள் பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்திலிருந்தே கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வருபவர் ஓவியா. எதற்கும் அலட்டிக் கொள்ளாமல், மற்றவர்களுக்காக தன்னை மாற்றிக் கொள்ளாமல், எப்போதும் சிரித்த படி இருக்கும் அவரை பலருக்கும் பிடித்திருக்கிறது.
 
முதலில், காயத்ரி மற்றும் ஜூலி உள்ளிட்ட சிலர் ஓவியாவை டார்கெட் செய்து பேசிவந்தனர்.  மேலும், ஓவியா கண்ணீர் விட்டு அழும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ஓவியா ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. 
 
எனவே, ஓவியா பேரவை, ஓவியா புரட்சிப்படை, ஓவியா ஆர்மி என உருவாக்கி அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுந்தனர். அவரை அழ வைத்த காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி ஆகியோருக்கு எதிராக மீம்ஸ்களையும் கருத்துகளையும் பதிவு செய்தனர்.


 

 
இந்நிலையில் ஒரு படிக்கும் மேலே போய், தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பது போல், அவரின் புகைப்படத்துடன் கூடிய பாதகைகளை கையில் பிடித்துக் கொண்டு தெரு தெருவாக சென்ற ஓவியா ரசிகர்கள், அவருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறதோ, இணையத்தில் கூகுள் தளத்திற்கு சென்று அவருக்கு நீங்கள் வாக்களிக்க முடியும். அல்லது தொலைபேசி மூலமாகவும் வாக்களிக்க முடியும். அதைத்தான் குறிப்பிட்டு அவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
 
ஓவியாவை ஒரு அரசியல் தலைவர் ரேஞ்சுக்கு ரசிகர்கள் கொண்டாடி வருவது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிறந்த குழந்தையின் வயிற்றில் குழந்தை: அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

மும்பையில் பிறந்த குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருந்துள்ளது. இதனை கண்டு ...

news

கமல்ஹாசன் முதல்வராகலாம்; ரஜினிக்கு வாய்ப்பு இல்லை: பிரபல ஜோதிடர் கணிப்பு!

தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசியல் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது. திமுக ...

news

தாலி கட்டியதும் மணமகனிடம் காதலுடன் ஓடப்போவதாக கூறிய மணமகள்

கேரள மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு மணமகள் காதலுடன் ஓடப் போவதாக மணமகனிடம் கூறிய ...

news

அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு: மோத உள்ள இரு துருவங்கள்!

அதிமுகவில் தற்போது டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிச்சாமியும் நேரடியாக மோதும் சூழல் ...

Widgets Magazine Widgets Magazine