Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கீழே உட்கார வைத்து அவமதித்த எடப்பாடி: அதிருப்தியில் ஓபிஎஸ்!

கீழே உட்கார வைத்து அவமதித்த எடப்பாடி: அதிருப்தியில் ஓபிஎஸ்!

சனி, 7 அக்டோபர் 2017 (13:18 IST)

Widgets Magazine

தமிழகத்தின் 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள் பலர் வருகை புரிந்தனர்.


 
 
இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவமதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அதே நேரத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
நேற்று நடைபெற்ற ஆளுநர் பதவியேற்பு விழாவில் முதல்வர் பழனிச்சாமி மேடையில் அமர்ந்திருந்தார். ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேடையில் இடம் ஒதுக்காமல் மேடைக்கு கீழே போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமைச்சர்களுடன் அமர வைக்கப்பட்டிருந்தார்.
 
இதனால் எடப்பாடி பழனிச்சாமி மீது ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று டெல்லி சென்ற அவர் இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து தனது அதிருப்தியை தெரிவிக்க அவரை சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்தார். ஆனால் பிரதமரை சந்திக்க ஓபிஎஸுக்கு நேரம் ஒதுக்கப்படாததால் மேலும் அப்செட்டில் ஓபிஎஸ் இருப்பதாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலா - நடராஜன் - மருத்துவமனையில் உருக்கமான சந்திப்பு

பரோலில் வெளிவந்துள்ள சசிகலா இன்று காலை தனது கணவர் நடராஜனை மருத்துவமனையில் சந்தித்தார்.

news

சசிகலாவுக்கு கணவர் மீது பாசம்லாம் இல்லை; அவர் வந்தது இதற்காகத்தான்: போட்டுடைத்த தீபா!

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் தண்டனை ...

news

சட்டை பாக்கெட்டில் வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்; வைராகும் வீடியோ

இந்தோனேசியாவில் வாடிக்கையாளர் ஒருவரின் சட்டை பையில் இருந்த ஸ்மார்ட்போன் வெடித்து சிதறிய ...

news

கூட்டணியே வேண்டாம் ; உங்களுக்கு பெரிய கும்பிடு : விஜயகாந்த் அலறல்

இனிமேல் கூட்டணி வைக்கப்போவதில்லை, தனியாகத்தான் தேர்தலில் போட்டியிடுவேன் என தேமுதிக தலைவர் ...

Widgets Magazine Widgets Magazine