Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிமுக, இரட்டை இலை இரண்டும் எங்களுக்குதான் சொந்தம்: ஓ.பி.எஸ். அணி


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (15:45 IST)
இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், ஓ.பி.எஸ். அணிக்கு சென்றவர்களை சசிகலா அதிமுக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று மதுசூதனன் சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதன்மூலம் ஓ.பி.எஸ். அணி அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை, கைப்பற்ற முயற்சித்து வருகிறது.

 

 
அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து பின், சசிகலா தரப்பில் இருந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றனர். இதனால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அவர்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.  
 
சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும், அவர் பொதுச்செயலாளரே இல்லை என்றும் மதுசூதனன் தெரிவித்தார். மேலும் அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் செல்லாது, நாங்கள் அதே பதவியில் தான் நீடிக்கிறோம் எங்களை நீக்கும் அதிகாரம் சசிகலாவுக்கு இல்லை கூறினார்.
 
இதையடுத்து மதுசூதனன் தற்போது சசிகலா, டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதால் பொதுச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவதாக மதுசூதனன் அரிவித்தார்.
 
இதன்மூலம் ஓ.பி.எஸ். அணி அதிமுக மற்றும் இரட்டை சின்னத்தை சசிகலாவிடம் இருந்து தங்கள் வசம் எடுத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். சட்டசபையில் பெருன்பான்மையை நீருபிக்கும் அணி அதிமுக கட்சியையும் அதன் சின்னத்தையும் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :