Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கையை ஏற்பாரா சபாநாயகர்?


bala| Last Modified வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (12:56 IST)
எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னரும் அதிமுகவில் நிலவி வரும் குழப்பம் சரியாகவில்லை. நாளை சட்டசபையில் பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்க வேண்டும். இதனால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பில் உள்ளது.

 

இந்தநிலையில் சபாநாயகர் தனபாலை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பாண்டியராஜன், செம்மலை,பொன்னையன் ஆகியோர் இன்று சந்தித்தனர்.  நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ள நிலையில் இவர்களது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தரப்பு, சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது என்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :