Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓ.பி.எஸ். அணிக்கு வந்த தீபாவிற்கு நெக்லஸ் பரிசு!

Sasikala| Last Modified புதன், 15 பிப்ரவரி 2017 (14:52 IST)
சசிகலாவின் தலைமையை ஏற்காத அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு அளித்தனர்.

 
பிப்ரவரி 7ஆம் தேதியன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று தியானம் செய்தார் ஒ.பன்னீர் செல்வம் இதனால் கட்சி  இரண்டாக பிளவு பட்டது.
 
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார். அதற்கு  தீபா நன்றி உரிய நேரத்தில் அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
 
இதனை தொடர்ந்து நேற்று இரவு ஒன்பது மணிக்குமேல் தமிழக காபந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் ஜெயலலிதா சமாதியில் சந்தித்துக் கொண்டார்கள். இதையடுத்து, அதிமுக-வின் இரண்டு  கரங்களாக நானும் ஓ.பன்னீர்செல்வமும் செயல்படுவோம் என்று தீபா கூறி ஓ.பி.எஸ். ஆதரவு தெரிவித்தார்.
 
தொடர்ந்து கிரின்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்குச் சென்ற தீபாவை ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி ஆரத்தி  எடுத்து வரவேற்றார்.  தீபாவை அழைத்துச்சென்று, ‘நீ என் மகளைப் போன்றவள்’ என்று அன்பை பொழிந்து தீபாவுக்கு ஒரு  வைர நெக்லஸை பரிசாகக் கொடுத்திருக்கிறார். அவரது அன்பில் கரைந்த தீபா அதனை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :