Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகர் ரஞ்சித்திடம் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஆவடி குமார்! (வீடியோ இணைப்பு)

நடிகர் ரஞ்சித்திடம் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஆவடி குமார்! (வீடியோ இணைப்பு)


Caston| Last Modified புதன், 12 ஏப்ரல் 2017 (09:53 IST)
அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த ஆவடி குமாரின் கேள்விக்கு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த நடிகர் ரஞ்சித் வாயடைக்கும் படி பதில் கூறியது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
 
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஆர்கே நகர் தேர்தல் ரத்தானது குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த நடிகர் ரஞ்சித் நாங்கள் தான் உண்மையான என்பதை நிரூபிக்க தேர்தல் களத்தில் நின்றோம் என்றார்.
 
அப்போது அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது குறுக்கிட்ட அதிமுக சசிகலா அணியை சேர்ந்த ஆவடி குமார் கட்சியில் உறுப்பினராக இல்லாமல் எப்படி உண்மையான அதிமுக என நக்கலாக கேட்டார். அதற்கு பதிலடி கொடுத்த நடிகர் ரஞ்சித் நான் உறுப்பினராக உள்ள கார்டை காட்டவா என்றார்.> >  
நன்றி: News18
 
நான் உறுப்பினராக இருக்கும் கார்டை காட்டினால் நீங்கள் உங்கள் கார்டை கிழித்து போட தயாரா என்றார். இதற்கு பதில் அளிக்க முடியாமல் மௌனமாக வாயில் கை வைத்தவாறு இருந்தார் ஆவடி குமார்.
 
அதனை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிட தயார். தைரியம் இருந்தால் தொகுதிக்கு சென்று மக்களை சந்தியுங்கள் என கேட்டார். இதற்கு பதில் அளிக்காமல், நீங்க பேச வந்தத பேசிட்டு போங்க, நாங்க என்ன செய்யனும்னு நீங்க சொல்லாதீங்க. அப்பா நான் பேசும்போது நீங்க எதுக்கு குறுகிட்டீங்கனு பதிலுக்கு ரஞ்சித் கேட்க பதில் அளிக்க முடியாமல் மீண்டும் மௌனம் ஆனார் ஆவடி குமார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :