1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2017 (11:15 IST)

ஜெ.வின் மரணம் குறித்து நீதி விசாரணை - சசிகலாவிற்கு செக் வைத்த ஓ.பி.எஸ்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிரடி அறிவிப்பை தொடர்ந்துள்ளார்.


 

 
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆளும் அதிமுக மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்தார். சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என கூறினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனையடுத்து சசிகலா மீதான ஒட்டுமொத்த எதிர்ப்பும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் பன்னீர்செல்வத்தின் பின்னால் ஒன்று சேர்ந்து நிற்பது போல ஒரு சூழல் உருவாகியுள்ளது. 
 
இந்நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பரபரப்பான பல தகவல்களை கூறினார். 
 
நான் அதிமுகவிற்கு எந்த நேரத்திலும் துரோகம் செய்யவில்லை. கட்டாயம் ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன். சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்...என்னை பாஜக இயக்குகிறது என்பது பொய்.... சட்டமன்றம் கூடும் போது என் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அவர்களுக்கு தெரியும்...
 
ஜெயலலிதா மரணம் பற்றி குறித்து நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்படும்...விசாரணையின் முடிவில் நாட்டு மக்களுக்கு உண்மை தெரியும்..” என அவர் கூறினார்.
 
ஜெ.வின் மரணம் பற்றி ஓ.பி.எஸ் சந்தேகம் எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.