Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்திற்கு 3 ஆண்டு சிறை - சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு


Murugan| Last Modified திங்கள், 17 ஏப்ரல் 2017 (18:01 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் அரங்கநாயகத்திற்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.

 

 
1991-96ம் ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர் அரங்கநாயகம். அவர் அமைச்சராக இருந்த போது ரூ.1.15 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
 
மேலும், இந்த வழக்கில் அரங்கநாயகத்தின் மனைவி, மன்கள் அனைவரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு சென்னை ஆட்சியலர் அலுவலக வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் பல வருடங்களாக நடைபெற்று வந்தது. தற்போது விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகியுள்ளது.
 
அந்த தீர்ப்பில், அரங்கநாயகத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், அவரது மனைவி மற்றும் மகன்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.  
 
அரங்கநாயகம் தற்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :