அடக்கொடுமையே.. முதல்வருக்கு இந்த நிலைமையா? - வைரலாகும் புகைப்படம்


Murugan| Last Modified திங்கள், 9 ஜனவரி 2017 (13:45 IST)
அதிமுக நிர்வாகிகளுடன்,  அக்கட்சியின் பொதுச்செயலாலர் சசிகலா எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் எங்கோ ஒரு மூலையில் நிற்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, 2 முறை முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம். அப்போதும் அவர் தன்னை முதல்வராக எங்கும் காட்டிக் கொண்டதில்லை. தற்போது ஜெ.வின் மறைவிற்கு பின், 3 வது முறையாக அவர் மீண்டும் முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார்.
 
ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும், அவரது குடும்பத்தினருமே கட்சியை வழி நடத்துகிறார் எனவும், அதிமுக அமைச்சர்கள் மற்றும் தலைமை அலுவலக அதிகாரிகளே கூட ஓ.பி.எஸ்-ற்கு தகுந்த மரியாதை அளிப்பதில்லை எனக்கூறப்படுகிறது. 
 
அந்நிலையில், சசிகலாவிற்கு எதிராக அவர் செயல்படுவதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் பரவின. ஆனால், சசிகலாவின் காலில் விழுந்து, நான் அப்படிப்பட்டவன் இல்லை என்பதை அப்பட்டமாக நிரூபித்தார் முதல்வர் ஓ.பி.எஸ்.
 
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 6 நாட்களாக, அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். மேலும், அவர்களோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அதில், சசிகலாவிற்கு அருகில் நிர்வாகிகள் நிற்க, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முகம் கூட சரியாக தெரியாத படி, எங்கோ ஒரு மூலையில் நிற்கும் புகைப்படம் வெளியாகி ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரு முதல்வருக்கு இந்த நிலைமையா என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :