Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேண்டாம்... அப்பாவி பொதுமக்கள்..... ஓ.பி.எஸ். வேண்டுகோள்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (17:23 IST)
சசிகலாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

 
தமிழக மக்கள் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவரால் பெரும்பான்மை நீருபிக்க முடியுமா என்பது தெரியவில்லை. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருவதாகவும், அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
 
தமிழக மக்கள் தாங்கள் விரும்பாத ஆட்சி அமைவதை கண்டித்து யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் தங்களது வேதனைக் குரலை வெளிப்படுத்துவதற்கு வேறு வழி தெரியவில்லை. கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். 
 
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :