அப்போ இல்லாத ஞானோதயம் இப்போது ஏன்? ஸ்டாலினை தாக்கிய ஓபிஎஸ்

Last Updated: வியாழன், 15 பிப்ரவரி 2018 (16:31 IST)
ஆட்சியின்போது போக்குவரத்து துறை மீது ஸ்டாலினுக்கு ஏற்படாத ஞானோதயம் இப்போது ஏற்பட்டது ஏன்? என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சென்னையில் உள்ள தலைமையகத்தில் இன்று ஜெயலலிதா பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-
 
வளர்ந்த மாநிலம் என்று கூறி தமிழகத்திற்கு தொடர்ந்து நிதி குறைப்பு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து வழங்கப்படும் வரி வருவாயில் உரிய பங்கை மத்திய அரசு வழங்க வேண்டும். 
 
திமுக ஆட்சி காலத்தில்தான் போக்குவரத்து துறைக்கு நிதிச்சுமை அதிகரித்தது. அப்போது போக்குவரத்து துறை மீது ஸ்டாலினுக்கு ஏற்படாத ஞானோதயம் இப்போது ஏற்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :