Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா குடும்பத்தை ஒதுக்க ஓபிஎஸ் காரணம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

சசிகலா குடும்பத்தை ஒதுக்க ஓபிஎஸ் காரணம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!


Caston| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (11:19 IST)
அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி பின்னர் அறிவித்தனர். இதனையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவித்தனர்.

 
 
இதனையடுத்து ஓபிஎஸ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைத்தது எங்கள் அணியின் தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என அறிவித்தார். இதனையடுத்து ஓபிஎஸ் அணியின் நிர்பந்தத்தால் தான் அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை அமைச்சர்கள் ஒதுக்கி வைத்ததாக பரவலாக பேசப்பட்டது.
 
இதனையடுத்து பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கவில்லை என தெரிவித்தார். கட்சியின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :