Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ. அண்ணன் மகள் தீபாவுக்கு ஓபிஎஸ் அழைப்பு: அதிரடி வியூகத்தில் அதிமுக!

ஜெ. அண்ணன் மகள் தீபாவுக்கு ஓபிஎஸ் அழைப்பு: அதிரடி வியூகத்தில் அதிமுக!


Caston| Last Modified புதன், 8 பிப்ரவரி 2017 (12:13 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவுக்கு அழைப்பு விடுத்தார்.

 
 
நேற்று இரவு முதல்வர் பன்னீர்செல்வம் ஒட்டு மொத்த தமிழகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்கும் வண்ணம் பொங்கி எழுந்துவிட்டார். சசிகலா தரப்பின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து தான் காட்டாய்யப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என்ற உண்மையையும் போட்டு உடைத்தார்.
 
இந்நிலையில் இன்று காலை அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தான் ராஜினாமாவை வாபஸ் வாங்குவதற்கு தேவை ஏற்பட்டால் கட்டாயம் வாபஸ் வாங்குவேன் என்றார். மேலும் தமிழக மக்களை சந்திக்க உள்ளதாகவும் பேசினார்.
 
மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற அடிப்படையில் தன்னுடன் இணைந்து செயல்பட ஜெ.தீபாவுக்கும் ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஏற்கனவே மாற்று வழியில்லாமல் தொண்டர்கள் தீபா பக்கம் சாய்ந்தனர்.
 
இன்னிலையில் புதிய மாற்றாக ஓபிஎஸ் வந்திருப்பது தீபாவையும் அவரது பக்கம் இருக்கும் அதிமுக தொண்டர்களையும் ஓபிஎஸ் பக்கம் ஒன்றிணைக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் ஓபிஎஸின் பலம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :