Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெரும்பான்மையை நிரூபிக்க ஓபிஎஸ்-க்கு ஆளுநர் உத்தரவிடுகிறார்?

பெரும்பான்மையை நிரூபிக்க ஓபிஎஸ்-க்கு ஆளுநர் உத்தரவிடுகிறார்?


Caston| Last Updated: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:29 IST)
பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநரின் தேர்வாக சசிகலா, பன்னீர்செல்வம் இதில் யார் இருக்கப்போகிறார் என்ற குழப்பம் அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆளுநர் பன்னீர்செல்வத்தை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவார் என்ற தகவல் வருகிறது.

 
 
அதிமுக இரண்டாக பிளவுபட்டு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு எனக்குத்தான் உள்ளது என சசிகலாவும், தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன், அதிமுக எம்எல்ஏக்களை கடத்தி சிறை வைத்துள்ளனர் என பன்னீர்செல்வமும் ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர்.
 
இப்போது முடிவு ஆளுநரின் கையில் உள்ளது, ராஜினாமா கடிதம் அனுப்பப்பட்டு அந்த ராஜினாமாவும் ஏற்கப்பட்ட பின்னர் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஓபிஎஸ் கூறியிருப்பதை பரிசீலிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? 134 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்துள்ள சசிகலாவை தட்டிக்களிக்க ஆளுநரால் முடியுமா? போன்ற பல குழப்பங்கள் நிலவி வருகிறது.
 
இந்நிலையில் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த சந்திப்பின் போது முதல்வர் பன்னீர்செல்வத்திடம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கூறுவார் என தகவல்கள் வருகின்றன.
 


இதில் மேலும் படிக்கவும் :