Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா பேசுவது வடிவேல் காமெடி போல் உள்ளது - ஓ.பி.எஸ் கிண்டல்


Murugan| Last Updated: திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:12 IST)
தன்னை சிங்கம் என கூறிய சசிகலாவை தமிழக முதல்வர் கிண்டலடித்துள்ளார்.

 

 
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ஜெயலலிதா என்ற சிங்கத்துடன் வாழ்ந்தவள் நான். ஒரு சிங்கம் போனால் இன்னொரு சிங்கம் வரும்.. சிங்கத்தின் பின்னாலும் சிங்க குட்டிகள்தான் வரும் என கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.ல்.ஏ-க்கள் முன்னிலையில் பேசினார். 
 
இதுபற்றி கருத்து தெரிவித்த ஓ.பி.எஸ் “ தன்னைத் தானே சிங்கம் என யாராவது சொல்லிக் கொள்வார்களா?.. அவர் சிங்கம்.. சிங்கம்.. என சொல்வது, வடிவேலு ‘ நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்’ என காமெடி செய்தது போல் இருக்கிறது” என சிரித்துக்கொண்டே கிண்டலடித்தார்.
 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :