ஓ.பி.எஸ்.க்கு 5 மணி சசிகலாவுக்கு 7.30 மணி: ஆளுநர் சந்திப்பு


Abimukatheesh| Last Updated: வியாழன், 9 பிப்ரவரி 2017 (14:48 IST)
இன்று பிற்பகல் சென்னை வரும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவை சந்திக்க உள்ளார். இன்றுமாலை 5 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா 7.30 மணிக்கு சந்திக்க உள்ளார்.

 


கடந்த 7ஆம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததை அடுத்து சசிகலாவுக்கு எதிராக திரும்பியுள்ளார். சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் ஆளுநர் சென்னை வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் ஆளுநரை சந்திக்க உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை திரும்ப பெறுவது குறித்து பேச உள்ளார். சசிகலா அவரது பதவி ஏற்பு குறித்து பேச உள்ளார்.

ஆளுநரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழக மக்களும் பெரிய எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :