மக்கள் நலனே முக்கியம்: தேர்தல் வெற்றி, தோல்விகள் ஒரு பொருட்டல்ல: ஓபிஎஸ் ஈபிஎஸ் அறிக்கை!
மக்கள் நலனே நமது குறிக்கோள் என்றும் தேர்தல் வெற்றி தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் அதிமுக தலைமையில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் இந்த கூட்டணி தொடர்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்முடைய இலக்கு புரட்சித்தலைவியின் பொற்கால அரசை மீண்டும் அமைப்பதுதான் என்றும் எதிரிகளால் இருள் சூழ்ந்திருக்கும் தமிழ்நாட்டை ஒளிமயமான பொன் உலகிற்கு இட்டுச் செல்வதாக மட்டுமே இருக்கிறது என்றும் வேறு எந்த சிந்தனையும் நம் மனதில் ஏற்பட்ட தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் அதிமுக தலைமையில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என்பதையும் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து தமிழ்நாட்டின் உயர்வு பெற உழைப்போம் என்றும் யாருக்கும் எப்போதும் எந்தவித ஐயமும் தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது