ஜெ. நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., தீபா: இருவரும் கூட்டணியா?


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (21:56 IST)
ஓ.பி.எஸ். மற்றும் தீபா தங்களது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளனர். இவர்களின் இந்த சந்திப்பு தமிழக அரசியல் சூழலில் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் வந்துள்ளார். இவர்களின் இந்த வருகை திட்டமிட்டதாக கருதப்படுகிறது. மேலும் இவர்களின் சந்திப்பு தமிழக அரசியல் சூழலில் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஓ.பி.எஸ். சசிகலா எதிராக மாறிய பின் ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபா ஆதரவு அளிக்க தயராக உள்ளதாக தெரிவித்து இருந்தார். தீபா ஒ.பி.எஸ். அணியில் இணைவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
 
தற்போது இவர்களின் இந்த சந்திப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதர்வு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் உடன் வந்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :