Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வீட்டிற்கே வந்து கடன் கொடுக்கும் நிறுவனம் - சென்னையில் அறிமுகம்


Murugan| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (13:18 IST)
பணம் தேவைப்படுபவர்களின் வீட்டிற்கே வந்து, தேவையான பணத்தை கொடுக்கும் திட்டத்தை, ஓப்பன் டேப் என்ற புதிய கடன் உதவி நிறுவனம் சென்னையில் தொடங்கியுள்ளது.

 

 
பொதுவாக ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பெரும்பாலான வங்கிகள் கடன் (லோன்) கொடுக்க முன் வருகிறது. எனவே, ரு.20 ஆயிரத்திற்கு கீழ் வருமானம் பெறுபவர்கள், அவசரத்திற்கு பணம் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள்.
 
அவர்களே குறி வைத்தே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.6 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் முதல் சம்பளம் பெறுபர்களுக்கு இந்த நிறுவனம் கடன் வழங்க முன் வந்திருக்கிறது. அதுவும் பணத்தை வீடு தேடி வந்து கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லது, வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
தற்போது, ரூ.50 ஆயிரத்தை கடனாக அளிக்க திட்டமிட்டுள்ள இந்த நிறுவனம், விரைவில் ஒரு லட்ச ரூபாயாக அதை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :