வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 9 மார்ச் 2017 (17:16 IST)

நெடுவாசலில் ஒப்பாரி போராட்டத்த்தின் போது, ஒப்பாரிக்கு ஆளான பாட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரானா ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.


 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து 22 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 21ஆவது நாள் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது பொன்னம்மாள் என்ற மூதாட்டி மயக்கம் அடைந்தார். மயக்கம் அடைந்த பொன்னம்மாள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம், நெடுவாசல் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பாரி போராட்டத்த்திற்கு சென்ற பாட்டி கடைசியாக ஒப்பாரிக்கு ஆளாகி விட்டாளே என்று அப்பகுதி மக்கள் பேசிக் கொண்டனர்.