வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (11:53 IST)

தீர்ப்பு குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு!

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும்  குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

 
சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துள்ள நிலையில் தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என  தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் 4 வாரத்திற்குள் சரண அடைய வேண்டும் என நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பை அளித்துள்ளது. மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. சசிகலா தண்டனை காலம் 4  ஆண்டுகள் உட்பட 10 ஆண்டுகள் சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது.

 
இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ’அம்மாவின் புனிதம் துரோகிகளால் களங்கப்படுத்தப்பட்டது என்று பதிவிட்டுள்ளனர். மேலும் ’ஜெயலலிதாவுக்காக அனைத்து துன்பத்தையும் சசிகலா ஏற்றுக்கொண்டார்’என்றும் குறிப்பிட்டுள்ளனர். 
 
இதில் உள்ள பதிவுகளுக்கு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து கமென்ட் போட்டு வருகிறார்கள்.