சின்னம்மா என சொல்லி ஏமாற்றிய பன்னீர்செல்வம்!

சின்னம்மா என சொல்லி ஏமாற்றிய பன்னீர்செல்வம்!


Caston| Last Modified சனி, 31 டிசம்பர் 2016 (11:33 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று வந்ததில் இருந்து அவரது நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக அவர் டெல்லி சென்று வந்ததும் சசிகலாவை சந்திக்காமல் தவிர்த்து வந்தார்.

 
 
இதனால் சசிகலாவுக்கும், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. சசிகலா பொதுச்செயலாளராக பன்னீர்செல்வம் விடமாட்டார் என பேசப்பட்டது.
 
தலைமைச்செயலாளரின் வீடு மற்றும் தலைமைச்செயலக அறை உள்ளிட்டவைகளில் வருமான வரித்துறை ராணுவத்தின் துணையுடன் நுழைந்து அதிரடி சோதனை நடத்திய போது மௌனமாக இருந்து வேடிக்கை பார்த்தார்.
 
பல்வேறு சந்தேகங்கள் எழுந்தபோது எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார் அவர். யாரும் சின்னம்மா, பெரியம்மா, பெரியம்மா என கூறக்கூடாது நமக்கு அம்மா மட்டுமே உண்டு அவர் விட்டு சென்ற பணிகள் உள்ளன, அதை கவனிப்போம் என பன்னீசெல்வம் கூறியதாக செய்திகள் வெளியாயின.
 
இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா எதிர்ப்பு அதிமுகவினர் உள்ளிட்ட பலரும் பாராட்டினார்கள். சசிகலாவுக்கு எதிராக முடிவெடுத்து பன்னீர்செல்வம் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என பலரும் எதிர்பார்த்தனர்.
 
ஆனால் எதிர்பார்த்தவர்களை ஏமாற்றியது போல் இருந்தது சசிகலாவை பொதுச்செயலாளராக்கி மான்புமிகு சின்னம்மா அவர்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியது என சமூக வலைதளத்தில் புலம்புகிறார்கள் சில அதிமுகவினர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :