வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 21 மே 2015 (12:58 IST)

விடைபெறுகிறார் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக முதலமைச்சர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் விடைபெறுகிறார்.
 
தமிழக முதலமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மே 23 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதற்காக, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவி ஏற்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.
 

 
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் நாளை காலை 7 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
 
இக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
 
பின்பு, அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக ஆளுநர் ரோசையாவிடம் வழங்குவார் என்றும், இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுப்பார் என்றும் தெரிய வருகின்றது.
 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவி ஏற்க வசதியாக, தற்போது, தமிழக முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.