ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா? சசிகலா முதலமைச்சர்?


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (15:18 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிடம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 


ஜெயலலிதா மறைவுக்கு அதிமுக கட்சி சார்பாக ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் சசிகலா தமிழக முதல்வராக போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

இதனிடையே ஜெயலலிதா ரத்த சொந்தமான அவரது அண்ணன் மகள் தீபா தனியாக கட்சி தொடங்கி சசிகலா எதிராக போட்டியிட தயாராகி உள்ளார். இந்நிலையில் தமிழக பொறுப்பு கவர்னர் நாளை திடீரென தமிழகம் வர உள்ளார். அதிமுக அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை குழு தொடங்கியது. இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் கொடுத்தார். ஆனால் அதற்கான பதில் சசிகலா தரப்பில் இருந்து எதுவும் வெளியாகவில்லை. இந்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதா? என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் அதிமுக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஏற்பாடுகள் சசிகலா அடுத்து முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தெரிய வருகிறது.


webdunia

இதில் மேலும் படிக்கவும் :