Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பணிவுக்கே பணிவு காட்டுபவன் நான் ; எம்.எல்.ஏ-வை கலாய்த்த ஓ.பி.எஸ் - சட்டசபையில் சிரிப்பலை


Murugan| Last Updated: வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:18 IST)
திமுக எம்.எல்.ஏவை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிண்டலடித்து பேசியது, சட்டசபையில் நேற்று சிரிப்பலையை ஏற்படுத்தியது.

 

 
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கவர்னர் உரை மீது, தாங்கள் கொடுத்த திருந்தங்களை எதிர்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். அப்போது பேசிய புகழேந்தி, பள்ளி குழந்தைகள் போல் தன்னுடை கைகளைக் கட்டிக் கொண்டு மிகவும் பவ்வியமாக பேசினார். இதைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.
 
அவருக்கு பதிலளித்து பேசிய ஓ.பி.எஸ், பணிவுக்கே பணிவு காட்டும் என்னையே புகழேந்தி மிஞ்சிவிட்டார். அவர் எப்போதும் இப்படியே நடந்து கொள்ள வேண்டும் என கூறினார். இது கேட்டு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :