ஓபிஎஸ்-க்கு பாஜக ஹோட்டல் ரூம்; ஈபிஎஸ்-க்கு தமிழ்நாடு இல்லம்; ஏன் இப்படி??

Last Updated: புதன், 22 மே 2019 (09:38 IST)
டெல்லியில் பாஜக விருந்து வைக்கும் ஹோட்டலின் ஓபிஎஸ்-ம், தமிழ்நாடு இல்லத்தில் ஈபிஎஸ்-ம் தங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன. பாஜக மீது பெரும் அதிருப்தி மக்களிடையே இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கயுள்ளது என கூறப்படுகிறது.  
 
இந்நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு நேற்று டெல்லியில் விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் கலந்து கொள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் சென்றிருந்தனர். 
இந்த விருந்தில் கலந்துக்கொள்ள முதலவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தனித்தனியாகவே சென்றனர். அதே போல், ஓபிஎஸ் பாஜக விருந்து வைத்திருந்த ஹோட்டலிலேயே ரூம் எடுத்து தங்கியதாகவும், ஈபிஎஸ் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ஓபிஎஸ் நிகழ்ச்சி நடக்கும் இடத்திலும் ஈபிஎஸ் வேறு இடத்திலும் தங்கியது பேச்சு பொருளாக மாறியுள்ளது. டெல்லியை பொருத்தவரை ஓபிஎஸ்-க்கு ஈபிஎஸ்-ஐ விட மவுசு அதிகம் என்பதால்தான் இந்த மாற்றம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதில் மேலும் படிக்கவும் :