தினகரனுக்கு ஆதரவு குரல்: டென்ஷனான ஓபிஎஸ்

Last Modified வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (19:39 IST)
அதிமுகவில் தினகரனுக்கு ஆதரவாக குரல் எழுந்துள்ளது என செய்திகள் வெளியானது. அதாவது, தினகரனை அதிமுகவில் இணைத்துக்கொள்ளும்படி அதிமுகவில் சிலர் குரல் கொடுப்பதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியது பின்வருமாறு, அமைச்சரவை மாற்றம் என்பது முதலமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அது குறித்து நான் பேச முடியாது. 
 
அதேபோல் தினகரன் மீண்டும் அதிமுகவில் மீண்டும் தனது குடும்பத்தை திணிக்க முயல்கிறார். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. அதோடு, சற்று டென்ஷனாகி இது போன்ற கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். இந்த மாதிரியான கேள்விகளுக்கு எப்போதும் என்னிடம் பதில் கிடைக்காது என கூறி சென்றுவிட்டார். 


இதில் மேலும் படிக்கவும் :