Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இறந்து போனவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை! - இது உண்மையா?

Last Modified: சனி, 31 டிசம்பர் 2016 (06:45 IST)

Widgets Magazine

அதிமுக பொதுக்குழு இன்று அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் சென்னை வானகரத்தில் கூடியது. இந்த பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 

இதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் நோபல் பரிசு பெறுவதற்கான விதிமுறைகளில் இறந்த ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட மாட்டாது என்ற விதி உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள நியூட்டன் அறிவியல் மன்றத்தை இளங்கோ அவர்கள் கூறுகையில், ”நோபல் பரிசு இணையத் தளத்திலும் (nobelprize.org) விக்கிப்பீடியாவிலும் உள்ள தகவல்களை அரைகுறையாகப் புரிந்து கொண்டு சில ஏடுகள் (உதாரணம்: ஆனந்த விகடன் மின்னிதழ்) பின்வரும் செய்தியை வெளியிடுகின்றன.

"1974 முதல் இறந்து போனவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை!"

இது உண்மையா? இச்செய்தியின்படி, ஒருவர் இறந்து போய்விட்டாலும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என்ற பொருள் உள்ளது. 1974 வரை இந்த விதி இருந்து வந்ததாகவும், 1974இல் அந்த விதிமாற்றப்பட்டதாகவும் பொருள் ஏற்படுகிறது.

இது உண்மை அல்ல. ஆரம்பம் முதலே, அதாவது 1901இல் முதன் முதலாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட காலம் தொட்டே, இறந்து போனவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படாது என்ற விதி இருந்தது.

அப்படியானால், 1974இல் என்ன மாற்றம் ஏற்பட்டது?

தமக்கு நோபல் பரிசு வேண்டும் என்று எவர் ஒருவரும் தாமே விண்ணப்பிக்க முடியாது. அவர் அடுத்தவர்களால் பரிந்துரைக்கப்பட்ட வேண்டும் (nominated by others). இவ்வாறு பரிந்துரைப்பதற்கான இறுதி நாள் ஒவ்வோராண்டிலும் பெப்ரவரி இறுதியாகும்.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவர் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் இறந்து போனாலும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும்.

உதாரணம்: டாக் ஹாமர் ஷீல்டு (1961 உலக அமைதி, முன்னாள் ஐநா பொதுச் செயலர்)

1974இல் இந்த விதியில் சிறிய மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் இறந்து விட்டாலும் பரிசு வழங்கப்படும். அதாவது, பரிந்துரைக்கப்பட்ட என்ற வாசகம் அறிவிக்கப்பட்ட என்று மாற்றம் பெறுகிறது.

ஒவ்வோராண்டும் அக்டோபர் தொடக்கத்தில் நோபல் பரிசு அறிவிக்கப்படும். டிசம்பர் 10 அன்று (நோபல் மறைவு நாள்) பரிசு வழங்கப்படும்.

அக்டோபரில் பரிசு அறிவிக்கப்பட்ட ஒருவர், டிசம்பருக்குள் இறந்து விட்டாலும் அவருக்கு (அவரின் பிரதிநிதிக்கு) வழங்கப்படும். இதுதான் 1974இல் செய்யப்பட்ட மாற்றம்.

மற்றப்படி, இறந்து போனவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட மாட்டாது என்ற விதி, 1901 முதலே செயல்பாட்டில் இருந்து வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜல்லிக்கட்டை தடை செய்ய மல்லுகட்டுவது ஏன்?: புரியாமல் தவிக்கும் சிம்பு

பல்வேறு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்வதுதான் ...

news

ராம மோகன் ராவின் சவாலுக்குப் பிறகும் நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம்? - ஸ்டாலின் காட்டம்

ராம மோகன் ராவின் சவால் பேட்டிக்குப் பிறகும், மேல் நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன் ...

news

ஜெயலலிதா காரிலேயே ஜெயலலிதா சமாதிக்கு வந்த சசிகலா!

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா ...

news

சசிகலா இன்று பொதுச் செயலாளராகிறார் - முதன்முறையாக பொதுவெளியில் பேசுகிறார்

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா இன்று சனிக்கிழமை [31-12-2016] ராயப்பேட்டையில் உள்ள ...

Widgets Magazine Widgets Magazine