Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை: செம்மலை


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:09 IST)
முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவர் இல்லை என முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.

 

 
சசிகாலா எதிராக தீர்ப்பு வந்த பின்னர் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக  இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி ஆளுநரை சந்தித்தார். 5 நிமிடத்தில் இந்த சந்திப்பு முடிவடைந்தது. 
 
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி.
 
இதனிடையே முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாவது:-
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஆதரவு இல்லை. அவர் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் இல்லை, என்று கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :